Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு…. எடுத்த விபரீத முடிவு…. அடித்து நொறுக்கியதால் பரபரப்பு….!!

காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மூக்கனூர் பகுதியில் கோபி என்ற ஆடு வியாபாரி வசித்து வருகின்றார். இவருக்கு ஸ்ருதி என்ற மகள் இருந்துள்ளார். இவரும் அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவருடைய மகன் பிரசாந்த் என்பவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு இருவரின் வீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்து அண்ணன் தங்கை உறவு முறை என்பதால் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த காதல் ஜோடிகள் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். அதன்படி பிரசாத் தனது மோட்டார் சைக்கிளில் ஸ்ருதியை அழைத்துக்கொண்டு புதுப்பேட்டை அக்ரகாரம் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு இருக்கக்கூடிய ஒரு கோவில் அருகில் காதல் ஜோடி இருவரும் விஷம் குடித்து மயக்க நிலையில் கிடந்தனர்.

இதனை கண்டு அவ்வழியாக சென்ற கிராம மக்கள்  நாட்டறம்பள்ளி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த சப்-இன்ஸ்பெக்டர் ராஜா சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காதல் ஜோடியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு ஸ்ருதிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஸ்ருதி செல்லும் வழியிலையே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் பிரசாந்தின் உடல்நிலை மோசமான நிலையில் இருக்கின்றது. இதனையடுத்து பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

எனவே ஸ்ருதி தற்கொலை செய்து கொண்ட தகவலை அறிந்ததும் கோபமடைந்த அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் பிரசாந்த் வீட்டிற்கு சென்று பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். இதுகுறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின் இருதரப்பினரிடமும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர்  கூறிய பின்பு பெண்வீட்டார் சமரசம் அடைந்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |