Categories
உலக செய்திகள்

“பிரிட்டன் மக்களுக்கு தடை விதியுங்கள்!”.. தொடர்ந்து வலியுறுத்தி வரும் ஜெர்மனி..!!

ஜெர்மன் சான்சலர், ஏஞ்சலா மெர்க்கல், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு பிரிட்டன் மக்கள் பயணிப்பதை தற்காலிக தடை செய்யுமாறு கூறிவருகிறார்.

ஏஞ்சலா மெர்க்கல், பிரிட்டன் மக்கள் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும் அவர்கள்  ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு வருவதை தடை விதிக்க வேண்டும் என்று கூறிவருகிறார். மேலும் டெல்டா வகை பிரிட்டனில் பரவி வருவதால், அந்நாட்டை பரிதாப நாடாக அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன், ஏஞ்சலாவின் இந்த முடிவை வரவேற்கிறார். எனினும் மால்டா, சைப்ரஸ், கிரீஸ் மற்றும் போர்ச்சுகல் போன்ற நாடுகள் சுற்றுலா பயணிகளால் தங்களுக்கு வரும் வருமானத்தை பாதுகாக்க நினைக்கும். எனவே இந்த தடையை மீறலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

பாலேரிக் தீவுகள், ஸ்பானிஷ், மால்டா போன்ற நாடுகள் வரும் புதன்கிழமையிலிருந்து பசுமைப் பட்டியலில் பிரிட்டனை இணைக்கும். எனவே பிரிட்டன் மக்கள் பலரும் முன்னரே தங்கள் கோடைகால சுற்றுலாவிற்கு இந்த இடங்களுக்கு செல்ல தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |