வீட்டில் மது பாக்கெட்டுகளை பதுக்கி வைத்திருந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பாவர்த்தம்பட்டறை பகுதியில் வெளிமாநில மதுபான பாக்கெட்டுகளை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக உமராபாத் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு ஒரு வீட்டில் கர்நாடக மாநில மது பாக்கெட்டுகளை வைத்து, வீட்டின் பின்புறம் உள்ள மாட்டுக் கொட்டகையில் விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர குற்ற செயல்களில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த சாந்தராஜ் என்பவருடைய மனைவி மஞ்சுளா என்பவரை கைது செய்து வீட்டில் இருந்த 588 மது பாக்கெட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.