திருப்பத்தூர் மாவட்டத்தில் 100 அரசுப் பேருந்துகள் கிருமி நாசினி தெளித்து பராமரிப்பு பணிகளுடன் இயக்கப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் சில தளர்வுளுடன் கூடிய ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது. அதன்படி இன்று (திங்கட்கிழமை) காலை 6 மணியிலிருந்து திருப்பத்தூர் மாவட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் வழக்கம்போல் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டது. திருப்பத்தூர், ஆம்பூர் ஆகிய பணிமனைகளில் இருந்து புறநகர் பேருந்துகள், வேலூர், சென்னை, தாம்பரம்போன்ற பல்வேறு பகுதிகளுக்கு 50 சதவீத பயணிகளுடன் 60 பேருந்துகள் இயக்கப்பட்டது. அதேபோன்று திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், ஆலங்காயம், கந்திலி, குரிசிலாப்பட்டு ஆகிய பகுதிகளுக்கு 42 டவுன் பேருந்துகள் என மொத்தம் 100 பேருந்துகள் இயக்கப்பட்டது.
எனவே பயணிகள் வருகை பொறுத்து பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று போக்குவரத்து கழக துணை பொது மேலாளர் ஜி. கலைச்செல்வன் கூறியுள்ளார். இதனால் அனைத்து பேருந்துகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டது. எனவே பயணிகள் சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், முக கவசம் அணிந்தும், அரசு உத்தரவை கடைப்பிடித்து பேருந்துகளில் பயணம் செய்ய வேண்டும் என்று போக்குவரத்து கழக துறை துணை பொது மேலாளர் கலைச்செல்வன் தெரிவித்துள்ளார். இதனையடுத்து குப்பம், சித்தூர், திருப்பதி பெங்களூர் ஆகிய பகுதிகளுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து இரு மாநில அரசுகளின் அறிவிப்புக்குப் பின்னர் முடிவு செய்யப்படும் என்று அவர் கூறியுள்ளார்.