பேரிடர் உபகரணங்களை போலீஸ் சூப்பிரண்டு நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் காவல்துறை வாகனங்கள் மற்றும் பேரிடர் கால மீட்பு உபகரணம் ஆகியவை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியபோது மாவட்டத்தில் புயல், மழை, வெள்ளம் போன்ற பேரிடர் பாதிப்பின் போது பொதுமக்களின் நலன் கருதி போலீஸ்துறை முக்கிய பங்கு வகிக்கின்றது. இதற்காக பேரிடர் பயிற்சி பெற்ற போலீஸ் மீட்புக் குழுவினர் அவர்களுக்கு தேவையான உபகரணங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளது.
எனவே எந்தவித பாதிப்பு ஏற்பட்டாலும் அதனை சரியாக எதிர்கொள்வதற்கு போலீஸ் துறை தயாராக இருக்கின்றது. இதேபோன்று பொதுமக்களின் அவசர உதவி, குற்றத்தடுப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு போன்ற பாதுகாப்பு பணிக்காக மோட்டார் சைக்கிள் ரோந்து வாகனங்கள், நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் ஆகியவை மாவட்டம் முழுவதிலும் 24 மணி நேரமும் இயங்கி வருகின்றது. எனவே பொதுமக்கள் பாதிப்பு குறித்து தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்ட் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.