தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கின் பலனாக தொற்று பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் தமிழகம் முழுவதும் 27 மாவட்டங்களில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நினையில் ஜூலை மாத தொடக்கத்தில் இருந்து முழுமையாக ஆம்னி பேருந்துகள் இயங்கும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஊரடங்கு காரணமாக 4000 க்கும் மேற்பட்ட பகுதிகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்க முடியாத சூழல் உள்ளது. இருப்பினும் இன்று முதல் ஒருசில பேருந்துகளும், ஜூலை மாதம் முதல் முழு வீச்சில் அனைத்து பேருந்துகளும் இயக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளனர்.