ஜம்மு காஷ்மீரில் சிறப்பு போலீஸ் அதிகாரிகள் இல்லத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் சிறப்பு போலீஸ் அதிகாரி மற்றும் மனைவி உயிரிழந்தனர்.
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திப்போரா என்ற பகுதியில் சிறப்பு போலீஸ் அதிகாரி பயாஸ் அகமது என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரின் மனைவி ராஜ பேகம் மற்றும் மகள் ராஃபியா. இந்நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் சிறப்பு அதிகாரி இல்லத்தை நோக்கி பயங்கரவாதிகள் திடீரென்று துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டனர்.
இச்சம்பவத்தில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் அவரது மனைவி உயிரிழந்தார். படுகாயமடைந்த மகளை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து அந்த பகுதியை சுற்றி வளைத்து பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.