நாசிக்கில் நள்ளிரவில் நடைபெற்ற போதை விருந்து நிகழ்ச்சியில் இருந்து 22 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
மராட்டிய மாநிலத்தில் சுற்றுலா பகுதியான நாசிக் என்ற பகுதியில் ஒரு பங்களா வீட்டில் போதை விருந்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இது குறித்து காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் அந்த இடத்திற்கு காவல்துறையினர் சென்றிருந்தபோது அங்கு அதிக சத்தத்துடன் பாடல் இசைத்துக் கொண்டிருந்தது. அந்த வீட்டிற்குள் நுழைந்து அனைவரையும் காவல்துறையினர் சுற்றிவளைத்தனர். அவர்கள் உள்ளே நுழைந்தபோது அனைத்து பெண்களும், ஆண்களும் போதையில் அரைகுறை ஆடையுடன் நடனமாடிக் கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளனர்.
பின்னர் அனைவரையும் சுற்றிவளைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சோதனையில் இருந்து 12 பெண்கள், 10 ஆண்களை கைது செய்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த போதை விருந்தில் போதைப் பொருட்கள் பயன்படுத்தி இருந்ததாகவும் கூறப்படுகின்றது. இதில் சிக்கிய பெண்களில் 4 பேர் இந்தி, தென்னிந்திய நடிகைகள் என்பது தெரியவந்து உள்ளது. மேலும் சிலர் வெப் சீரியல்களில் நடிக்கும் மாடல் அழகிகள் ஆவர். இதேபோல பிக்பாஸ் போட்டியாளர் எனக்கூறப்படும் பெண், நடிகை மற்றும் நடன இயக்குனர் என கூறப்படுகிறது. இதற்கு ஏற்பாடு செய்தார்கள் என்பது குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.