Categories
உலக செய்திகள்

திடீரென்று கத்தியால் குத்திவிட்டு ஓடிய மர்மநபர்.. ஜெர்மனியில் பரபரப்பு..!!

ஜெர்மனியில் மர்மநபர் சாலையில் திடீரென்று கத்திக்குத்து தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஜெர்மனியில் உள்ள Thuringia என்ற மாநிலத்தில் இருக்கும் Erfurt என்ற நகரத்தில் கடந்த இன்று காலை 6 மணியளவில் ஒரு நபர் திடீரென்று சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த இரண்டு பேரை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இதில் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் தற்போதைய நிலை என்ன? என்பது தொடர்பில் தகவல் தெரிவிக்கப்படவில்லை. எனவே காவல்துறையினர், நகரத்தில் உள்ள மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு தெரிவித்துள்ளார்கள். மேலும் ஹெலிகாப்டரில் அந்த நபரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |