Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

என்னால தாங்க முடியல… பெண் எடுத்த விபரீத முடிவு… நீலகிரியில் நடந்த சோகம்…!!

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ருக்மணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ருக்மணி தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதனை அடுத்து மயங்கிய நிலையில் கிடந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ருக்மணி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ருக்மணியின் தற்கொலை விவகாரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |