சாலையில் சுதந்திரமாக சுற்றித்திரியும் ஆடு, மாடுகளால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி மெயின் ரோடு, மார்க்கெட் பகுதி போன்ற பகுதிகளில் ஆடு, மாடுகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இந்நிலையில் மெயின் ரோட்டில் ஆடு,மாடுகள் சுதந்திரமாக உலா வருவதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் இப்பகுதியில் சுற்றித் திரியும் ஆடு, மாடுகள் ஒன்றுக்கொன்று சண்டை போடுவதால் சாலையில் செல்லும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். அதிலும் சில மாடுகள் பொதுமக்களை துரத்திக் கொண்டு பின்னால் ஓடுகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது ஆடு, மாடுகள் சுதந்திரமாக சுற்றித் திரிவதால் அருகிலிருக்கும் தேயிலைத் தோட்டங்களில் அவற்றை வேட்டையாடுவதற்காக சிறுத்தை பதுங்கி உள்ளது. இதனையடுத்து சிறுத்தை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து விடுவதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கால்நடைகளை வளர்ப்பவர்கள் அவரவர் வீடுகளில் கட்டி வைக்க வேண்டும் எனவும், அதனை மீறினால் அதிகாரிகள் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.