மதுவில் விஷத்தை கலந்து கூலி தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .
திருவண்ணாமலை மாவட்டம் கேங்காபூண்டி கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை என்பவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டு பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் அவருக்கு உடல்நலம் குணமாகவில்லை. இதனால் மிகுந்த மன உளைச்சலுடன் இருந்த அவர் மதுவில் விஷத்தை கலந்து குடித்துள்ளார். இதனால் அவர் வலி தாங்க முடியாமல் அலறி சத்தம் போட்டுள்ளார். இவருடைய அலறல் சத்தத்தை கேட்ட அங்கிருந்தவர்கள் இவரை மீட்டு தேசூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அவருக்கு அங்கு முதலுதவி அள்ளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் உயர் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தேசூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.