விருச்சிகம் ராசி அன்பர்களே.! இன்பமும் துன்பமும் கலந்தே காணப்படும்.
இன்று குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்துக் கொள்ளவில்லையே என்று வருத்தப் படுவீர்கள். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை கூட இழக்கக்கூடிய சூழ்நிலை இருக்கும். தேவையில்லாத விஷயத்திற்கு சந்தேகப்பட வேண்டாம். தயவுசெய்து மற்றவர்களுடைய மனதை காயப்படுத்த வேண்டாம். உங்களுடைய பணியைத் தொடர்ந்து செய்து கொண்டே இருங்கள். தேவையில்லாத விவகாரங்களில் தலையிட்டு மன அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். சகிப்புத் தன்மை தேவைப்படும். நண்பர்களுடன் பேசும்போது விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டும். உங்கள் கீழ் பணிபுரிபவர்களிடம் அன்பு காட்ட வேண்டும். முன்கோபம் இல்லாமல் இருந்தாலே பாதி பிரச்சனைகள் சரியாகிவிடும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். வாகனம் வாங்க கூடிய யோகம் இருக்கின்றது. இன்று துன்பமும் இன்பமும் கலந்த காணப்படும். மாணவர்கள் தைரியமாக இருக்க வேண்டும். படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். வேறு எதிலும் கவனம் செலுத்த வேண்டாம். இந்த காதலில் உள்ளவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும். அப்போது தான் காதல் கை கூடும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு அதிர்ஷ்டமான எண்: 5 மற்றும் 6 அதிர்ஷ்டமான நிறம்: நீலம் மற்றும் பச்சை