கும்பம் ராசி அன்பர்களே.! பிரச்சனைகள் தீரும்.
இன்று எடுத்த வேலைகளை நீங்கள் செய்து முடிக்காமல் ஓய மாட்டீர்கள். எந்த ஒரு பிரச்சனைக்கும் கண்டிப்பாக இன்று தீர்வு கிடைத்துவிடும். மனம் தளராமல் எந்த ஒரு வேலையிலும் ஈடுபடுவீர்கள். தாயாருடன் சின்ன சின்ன மனஸ்தாபங்கள் வரும். பழைய கடனைத் தீர்க்க புது வழி பிறக்கும். யோசித்து செய்தால் வெற்றி ஏற்படும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனைகள் சரியாகும். உத்தியோகத்தில் முன்னேறிச் செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். சாதுரியமாகப் பேசி காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். அக்கம்பக்கத்தினர் நட்பு கிடைக்கும். பணவரவு கூடும். காரியத்தடைகள் நீங்கும்.
செல்வம் சேரும். செல்வாக்கு கூடும். வாழ்க்கைத்தரம் உயர்வதற்கான சூழலில் இருக்கும். சிந்தனைத் திறனை அதிகப்படுத்துவீர்கள். மாணவர்கள் எதையும் திறம்பட செய்வீர்கள். கல்வி பற்றிய அக்கறை அதிகமாக இருக்கும். கல்வியில் சாதிக்கக்கூடிய அம்சம் இருக்கும். சிக்கல்கள் தீர்ந்து மகிழ்ச்சியாக இருக்கும். கண்டிப்பாக காதல் கைகூடி இன்பத்தை கொடுக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு அதிர்ஷ்டமான எண்: 5 மற்றும் 7 அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை