நேற்று முதல் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளுடன் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் கர்நாடக எல்லையில் இ-பாஸ் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது.
தமிழகத்தில் நேற்று முதல் புதிய கட்டுப்பாடுகளுடன் தளர்வுகள் அமலுக்கு வந்தது. இந்த தளர்வுகளில் சில மாவட்டங்களுக்கு மட்டும் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்திருந்தது. மேலும் 50% பயணிகளுடன் மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மாவட்டங்களுக்குள் மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. மாநிலம் விட்டு மாநிலம் செல்வதற்கு ரயில் சேவைக்கு மட்டுமே அனுமதி உள்ள நிலையில் பேருந்துகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஓசூர் பேருந்து நிலையத்தில் இருந்து 50% பயணிகளுடன் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. இதனால் ஓசூர்-பெங்களூரு இடையே பேருந்துகள் இயக்கப்பட காரணத்தினால் சிலர் ஒரு கிலோ மீட்டர் நடந்து சென்று கர்நாடக எல்லையை கடந்து அம்மாநில பேருந்துகளில் பயணிகள் பயணித்து செல்கின்றனர். இதனால் வெளி மாநிலங்களில் இருந்து வருவோருக்கு இ பாஸ் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.