ஒடிசா மாநிலத்தில் 3 அடி நீள பாம்பு 4 அடி நீள பாம்பு விழுங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் குர்டா மாவட்டத்தில் பாலகதி கிராமத்தில் புதரோரம் என்ற பகுதிக்கு அருகில் 4 அடி நீள பாம்பு ஒன்று, 3 அடி பாம்பை விழுங்கி கொண்டிருந்தது. இந்த இரண்டு பாம்புகளும் கோப்ரா எனப்படும் வகையைச் சேர்ந்தது. இதுபற்றி பாம்பு உதவி குழுவை சேர்ந்த உறுப்பினர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டது.
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் சிறிய 3 அடி பாம்பை மீட்டு வனப்பகுதிக்கு கொண்டு சென்றுவிட்டனர். பொதுவாக பாம்புகள் தவளை, எலி போன்ற சிறிய விலங்குகளை உண்ணும் தன்மை கொண்டது. இருப்பினும் ஒரு சில பெரிய பாம்புகள் மட்டுமே சிறிய பாம்புகளை உண்ணும் வழக்கம் கொண்டுள்ளது. மனிதர்கள் நர மாமிசம் உண்பது போல பாம்புகளுக்கும் இந்த தன்மை உள்ளது.