Categories
தேசிய செய்திகள்

இந்த விஷயத்திற்கு இப்படியா முடிவு எடுக்கிறது…. ஒரே குடும்பத்தில் 6 பேர் குளத்தில் குதித்து தற்கொலை… கர்நாடகாவில் துயரம்…!!!

கர்நாடகாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம், யாத்கிர் மாவட்டத்தில் வசித்து வந்த ஒரு தம்பதி தனது மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகனுடன் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் உதவியுடன் குளத்திலிருந்து உடல்களையும் வெளியில் எடுத்தனர். இவர்கள் ஏன் தற்கொலை செய்து கொண்டார்கள் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

இவர்கள் தனது நிலத்தின் சிறு பகுதியில் பூந்தோட்டம் அமைக்கும் பணியில் ஈடுபட்டதாகவும், அது தோல்வியில் முடிந்ததாகவும் கூறப்படுகின்றது. அதுமட்டுமில்லாமல் நிறைய கடன் தொல்லை இருந்த காரணத்தினால் மனம் உடைந்த இந்த தம்பதிகள் தங்களது குழந்தைகளுடன் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |