ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளை தனிநாடாக சித்தரித்த ட்விட்டர் நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் புதிய டிஜிட்டல் கொள்கைகளை கடைப்பிடிக்க மறுத்த ட்விட்டர் நிறுவனம் தொடர்ந்து மத்திய அரசுடன் மோதலை ஏற்படுத்தி வருகின்றது. இந்தியாவின் தவறான வரைபடத்தை வெளியிட்டு புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. ட்விட்டரின் இணையதளத்தில் வேலைவாய்ப்புகள் தொடர்பான பக்கத்தில் ஜம்மு-காஷ்மீரின், லடாகையும் காணவில்லை. அதற்கு பதிலாக இந்த பகுதிகள் சேர்ந்து தனி நாடாக குறிக்கப்பட்டுள்ளது. இந்த தவறான வரைபடம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூக வலைத்தளங்களிலும் நெட்டிசன்கள் இதற்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதன்பின்பு இந்தியாவின் வரைபடத்தை ட்விட்டர் நிறுவனம் நீக்கியது. இதுபோன்ற செய்வது இது முதல் முறை அல்ல. கடந்த ஆண்டு லடாக்கின் தலைநகரான லே-வை சீனாவின் பகுதியாக டுவிட்டர் சித்தரித்து, அதற்கு இந்தியாவின் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதேபோல் தற்போதும் தவறான வரைபடத்தை காட்டியதால் இந்திய டுவிட்டர் நிறுவனத்தின் இயக்குனர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் இந்தியா நிறுவன இயக்குனர் மனீஷ் மகேஸ்வரி மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 505 (2) தொழில்நுட்ப சட்டம் 2008 பிரிவு 74-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.