Categories
தேசிய செய்திகள்

ஏற்கனவே 2 மனைவி இருக்கும் போது… 3வது திருமணம் கேக்குதா…? கணவரின் பிறப்புறுப்பை துண்டாக்கிய 2வது மனைவி…!!!

தனது கணவர் மூன்றாவது திருமணம் செய்ய நினைத்ததால் இரண்டாவது மனைவி பத்தி ஒன்றை எடுத்து கணவரின் பிறப்புறுப்பை துண்டாக்கி வெட்டியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் அருகே உள்ள மவுல்வி வகில் அஹ்மத் என்ற நபருக்கு 57 வயதாகிறது. இவர் ஒரு மதகுரு ஆவார்.  இவர் ஏற்கனவே இரண்டு பெண்களுடன் திருமணமாகி ஒரே வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் அவர் மூன்றாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார். இதன் காரணமாக இரண்டு மனைவிகளுக்கும் இவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை இரண்டு மனைவிகளும் நீங்கள் மூன்றாவது திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று தெரிவித்துள்ளனர்.

ஆனால் அவர்தான் கட்டாயம் மூன்றாவது திருமணம் செய்து கொள்வேன் என்று அவர்களிடம் சண்டையிட்டு உள்ளார். பின்னர் அவருடைய இரண்டாவது மனைவி ஹஸ்ராவிற்கு இதனால் பெருத்த கோபம் ஏற்பட்டது. இவர் இரவு தூங்கிக் கொண்டிருந்தபோது அடுப்பங்கரையில் இருந்த கத்தியை எடுத்து வந்து அவரின் பிறப்புறுப்பை துண்டாகி இருக்கிறார். இதன் காரணமாக அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு அவர் துடிதுடித்து மரணம் அடைந்தார்.

பின்னர் அவரின் கொலையை மறைக்கும் வகையில் அவரின் உறவினர்கள் உதவியுடன் இறுதி சடங்கு ஏற்பாடுகளை செய்தார். இருப்பினும் அக்கம் பக்கத்தினருக்கு இவர் மரணத்தில் சந்தேகம் ஏற்படவே, காவல்துறைக்கு தகவல் அனுப்பினார். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்தபோது, உண்மைகள் அனைத்தும் வெளிவந்தது. பின்னர் ஹஸ்ராவையும் கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |