வாகனத்திற்கு கவர்ச்சிகரமான பேன்ஸி நம்பர் வாங்கவேண்டுமென்றால் 1 லட்சம் வரை செலவாகுமென்று திருத்தப்பட்ட வாகனசட்டத்தின் மூலம் தெரிகின்றது.
புதிதாக திருத்தப்பட்ட வாகன மோட்டார் சட்டத்தின் படி வாகனங்களுக்கு வழங்கும் பேன்ஸி வாகன பதிவு எண்களுக்கான விலைகளை உத்தர பிரதேச மாநில அரசு உயர்த்தியுள்ளது. அதன்படி வாகனங்கள் முக்கியமான, கவர்ச்சிகரமான எண்களை பெற வேண்டுமென்றால் ரூ.15,000 முதல் ரூ.1 லட்சம் வரை செலவாகும் என்று தெரிகிறது. இதற்கு முன்பு வாகனத்திற்கு வாங்கும் பேன்ஸி நம்பர் பிளேட்டுகளுக்கு ரூ.3000 முதல் 20,000 வரை மட்டுமே செலவாகியது.
வாகன பதிவு எண் பெயர்வுத்திறனுக்கான விதிகள் உத்தர பிரதேசத்தில் தளர்த்தப்பட்டு , வணிக மற்றும் வர்த்தக சாராத வாகனங்களுக்கான பதிவு எண்களின் பெயர்வுத்திறனை மட்டும் அம்மாநில அரசு அனுமதித்துள்ளது.இந்த ஆண்டின் தொடக்கத்தில் டெல்லியில் வாகனங்களுக்கான ஆடம்பர , கவர்ச்சியான பதிவு எண்களின் மின் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் பேன்ஸி எண்ணான 0001 ரூ.7.70 லட்சத்திற்கு ஏலத்திற்கு சென்றது குறிப்பிடத்தக்கதாகும்.