தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கினால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. எனவே ஊரடங்கை ஜூன்-28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. அதில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து மேலும் ஜூலை-5 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா காரணமாக சென்னை மெட்ரோ ரயிலில் பாஸ் இருந்தும் பயணிக்காத நாட்களுக்கான சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மே 10ஆம் தேதி முதல் ஜூன் 20ஆம் தேதி வரை பயன்படுத்தப்படாத மெட்ரோ ரயில் பயண அட்டை செல்லுபடியாகும். பொது முடக்க காலத்தில் கியூ ஆர் குறியீடு பயணச் சீட்டு மூலம் பயணம் செய்யும் பயணிகளின் பயண எண்ணிக்கை செல்லுபடி ஆகும் கால அளவு இன்று முதல் நீக்கப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.