Categories
டெக்னாலஜி பல்சுவை

வாட்ஸ் ஆப்பிலேயே நீங்க ஈஸியா பணத்தை அனுப்பலாம்… எப்படி தெரியுமா…? முழு விவரம் இதோ…!!!

இந்திய கட்டண கார்ப்பரேஷன் (NPCI) உடன் இணைந்து பணம் செலுத்தும் அம்சத்தை WhatsApp வடிவமைத்துள்ளது. இந்த வசதி நவம்பர் 6ஆம் தேதி முதல் செயல்பாட்டிற்கு வந்தது. இந்த வசதியைப் பயன்படுத்தி பணம் எப்படி அனுப்பலாம் என்பதைப் பார்ப்போம்.

நீங்கள் பணம் அனுப்பும் முன் உங்களுக்கான upi Idஐ உருவாக்கவேண்டும். அதற்கு விரும்பும் நபருடனான chat box-ஐத் திறக்கவும். அதில் ‘attach’-ஐ கிளிக் செய்து, ‘Payment’-ஐத் தேர்ந்தெடுக்கவும்.உங்கள் டெபிட் கார்டு தகவலைச் சரிபார்க்க ‘Continue’ என்பதை டேப் செய்யவும். உங்கள் டெபிட் கார்டு எண்ணின் கடைசி 6 இலக்கங்கள், காலாவதி தேதி ஆகியவற்றை உள்ளிட்டு ‘Done’ ஐ கிளிக் செய்யவும். இப்போது UPI PIN ஐ செட் அப் செய்யவும். அப்போது உங்களுக்கு ஒரு OTP கிடைக்கும். ‘ENTER OTP’ இன் கீழ் OTP ஐ டைப் செய்யவும்.

பின்னர் ஒரு UPI PIN-ஐ உருவாக்கவும். அதை ‘SETUP UPI PIN’ இன் கீழ் உள்ளிட்டு ‘Submit’-ஐத் தட்டவும். UPI செட் அப் முடிந்ததும், ‘Done’ என்பதை கிளிக் செய்யவும். இப்போது உங்களுக்கான UPI ஐடி உருவாக்கப்பட்டுவிட்டது. இனி நீங்கள் விரும்பும் நபர்களுக்கு பணத்தை எப்போது வேண்டுமானாலும் அனுப்பலாம். அதற்கு நீங்கள் பணம் அனுப்ப விரும்பும் நபருடனான சேட் பாக்ஸைத் திறக்கவும். அதில் ‘Attach’-ஐ டேப் செய்து பின்னர் ‘Payment’-ஐ டேப் செய்யவும். நீங்கள் அனுப்ப விரும்பும் தொகையை உள்ளிடவும். பின்னர் கட்டணம் செலுத்துவதற்கான விளக்கத்தை உள்ளிட்டு ‘Send’-ஐ கிளிக் செய்யவும். குறிப்பிட்ட நபரின் கணக்கிற்கு பணம் சென்றிருக்கும்.

Categories

Tech |