Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“திருவள்ளுர் அருகே சோகம்”…. விஷவாயு தாக்கி பிறந்த நாளன்று இறந்த வாலிபர்…!!

திருவள்ளுர் அருகே விஷவாயு தாக்கி வாலிபர்  உயிரிழந்த நிலையில், நண்பர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.  

திருவள்ளுர் அருகே பேரத்தூர் மாந்திப்பை கிராமத்தைச் சேர்ந்த 24 வயதுடைய சம்பத்குமார் என்பவர், சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலைபார்த்து வந்தார். இந்நிலையில் சம்பத்குமார் தனது பிறந்த நாளையொட்டி நண்பர் நரேந்திரன் (வயது 31) என்பவருடன் ஓம்சக்தி நகரில் இருக்கும் ஆசிரமத்திற்கு சென்றுள்ளார். அங்கு ஆசிரமத்தில் இருக்கும் போது  சந்தானம் குருஜி என்பவர்  கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர்கள் இருவரும் கழிவுநீர் தொட்டியில் அடைப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்ட தாகச் சொல்லப்படுகிறது.

Image result for gas poison

முதலில் நரேந்திரன் கழிவுநீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்துள்ளார். அப்போது அவர்  திடீரென விஷவாயு தாக்கப்பட்டு  தொட்டியில்  மயங்கி விழுந்துள்ளார். விஷ வாயு தாக்கப்பட்டது தெரியாமல்  தனது நண்பர் சம்பத்குமாரை  தொட்டியில் இறங்கி காப்பாற்ற முயன்ற போது அவரும் விஷவாயு தாக்கி மயங்கினார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். ஆனால் அதற்குள் சம்பத்குமார் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே பலியானார்.

Image result for dead
அதன்பின் உயிருக்கு போராடிய நரேந்திரனை  சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருநின்றவூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் வழக்குப்பதிவு செய்து போலீசார் சந்தானம் குருஜியிடம்  விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்த நாளன்று வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |