Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. வங்கி ஊழியர் போல் பேசி ரூ.20 லட்சம் அபேஸ்….!!!!

தற்போது ஆன்லைன் மூலமாக பல மோசடிகள் தொடர்ந்து நடந்து கொண்டே வருகின்றன. போலீசார் எச்சரிக்கை விடுத்த போதிலும் மக்களை ஏமாற்றி சிலர் பணம் பறிமுதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.இந்நிலையில் புதுச்சேரியில் கீதா என்பவருக்கு ஒரு நபர் செல்போனில் தொடர்பு கொண்டு வங்கி மேலாளர் பேசுவதாக கூறி வங்கிக் கணக்கு விவரங்களை கேட்டு உள்ளார்.

அதனை நம்பிய கீதா வங்கி விவரங்களை அளித்த நிலையில், அவரது வங்கி கணக்கில் இருந்து 20 லட்சம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டது. இதுகுறித்து உடனடியாக வங்கிக்கு தகவல் தெரிவித்ததால் 11 லட்சம் திரும்பப் பெறப்பட்டது. மேலும் இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

Categories

Tech |