Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

என்னால விட முடியல… வாலிபர் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மனவேதனையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கே.பி.பி. ஆர். காம்பவுண்ட் பகுதியில் கணேசன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் தங்க நகைகளை செய்யும் தொழிலை செய்து வருகின்றார். இவருக்கு மூன்று மகன்களும், இரண்டு மகள்களும் இருக்கின்றனர். இவர்களில் மூன்றாவது மகனான கற்குவேல் ராஜா என்பவர் அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் புரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே கற்குவேல் ராஜா மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி விட்டதால் அவர் மிகுந்த மன வேதனையில்  வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் கற்குவேல் ராஜாவின் தந்தை கணேசன் ஏன் வேலைக்கு செல்லவில்லை என்று கேட்டுள்ளார். அதற்கு கற்குவேல்ராஜா தன்னால் மது பழக்கத்தை விட முடியவில்லை என்று மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கருகு வேல்ராஜா வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து வெளியே சென்று விட்டு வீட்டிற்கு சென்ற அவரின் தந்தை தனது மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அலறி சத்தம் போட்டுள்ளார். அந்த அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று பார்த்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கருகு வேல் ராஜாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |