Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஏற்கனவே 11 குழந்தைகள்… கணவரின் கொடூர செயல்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

தனிமையில் இருக்க மறுப்பு தெரிவித்ததால் கணவர் மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு குப்பம் கிராமத்தில் இருக்கும் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு பின்புறம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இறந்து கிடந்த பெண் ஆலப்பட்டி கிராமத்தில் பசிக்கும் பொன்னுச்சாமி என்பவரின் மனைவியான லட்சுமி என்பது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இந்த தம்பதிகளுக்கு 11 குழந்தைகள் இருக்கின்றனர்.

இவர்கள் அரசங்குப்பம் பகுதியில் தங்கியிருந்து பாட்டில், பேப்பர் போன்றவற்றை சேகரித்து தங்களது வாழ்க்கையை கழித்து வந்துள்ளனர். இதனை அடுத்து காவல்துறையினர் தலைமறைவாக இருக்கும் லட்சுமியின் கணவரான பொன்னுசாமியை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் இரவு நேரத்தில் லட்சுமியுடன் தனிமையில் இருக்க பொன்னுச்சாமி அவரை அழைத்துள்ளார். ஆனால் குழந்தைகள் இருப்பதாக கூறி லட்சுமி அதற்கு மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த பொன்னுசாமி வீட்டில் இருந்த அரிவாளால் லட்சுமியை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடியது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

Categories

Tech |