சமூக இடைவெளியை மறந்து பொதுமக்கள் மீன் வாங்குவதற்காக குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. எனவே பொதுமக்கள் முககவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது .
ஆனால் வேலூர் மாவட்டம் புதிய மீன் மார்க்கெட் அருகில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள மீன் கடையில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மீன் வாங்குவதற்காக திரண்டு வந்தனர். இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது.