Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

சொன்னால் கேட்க மாட்டீங்க…. அப்புறம் இப்படிதா பண்ணனும்…. அதிகாரிகளின் நடவடிக்கை….!!

கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்காத மீன், இறைச்சி கடை உரிமையாளருக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள மக்கான் மீன் மார்க்கெட், இறைச்சிக் கடைகளில் ஞாயிற்றுக்கிழமை கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றபடுவதில்லை என்று கலெக்டர் குமாரவேல் பாண்டியனுக்கு புகார்கள் வந்துள்ளது. அந்த புகாரின்படி கலெக்டர் மீன் மார்க்கெட் மற்றும் இறைச்சி கடைகளில் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்கு வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி தாசில்தார் ரமேஷ், வருவாய் ஆய்வாளர்கள் ரகுராம், திவ்யபிரணவ், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் மக்கான் மீன் மார்க்கெட் மற்றும் சில்லரை மீன் விற்பனை நடைபெறும் தற்காலிக பேருந்து நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு சமூக இடைவெளியை கடைபிடிக்காத மற்றும் முககவசம் அணியாத வியாபாரிகள், பொதுமக்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

இதனையடுத்து மக்கான் பகுதியிலுள்ள இறைச்சி மற்றும் மீன் கடை முன்பு பெரும்பாலானோர் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் குவிந்ததால் அந்த கடையின் உரிமையாளருக்கு தாசில்தார் ரமேஷ் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். அதன்பின் சைதாப்பேட்டை, சத்துவாச்சாரி போன்ற பல பகுதிகளில் இருக்கும் மீன், இறைச்சி கடையில் வருவாய் துறையினர் ஆய்வு மேற்கொண்டு விதிமுறைகளை கடைபிடிக்காத கடை, ஓட்டல் உரிமையாளருக்கு  அபராதம் விதைத்தனர். இவ்வாறு வேலூர் நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற இந்த ஆய்வில் போது கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத மீன், இறைச்சி கடைகள், ஓட்டல் உரிமையாளருக்கு மொத்தம் 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது என்று வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |