Categories
சினிமா தமிழ் சினிமா

அதர்வாவின் ‘குருதி ஆட்டம்’… முதல் பாடல் ரிலீஸ் எப்போது தெரியுமா‌?…!!!

அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள குருதி ஆட்டம் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் குருதி ஆட்டம். ஸ்ரீ கணேஷ் இயக்கியுள்ள இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார் . மேலும் இந்த படத்தில் ராதிகா சரத்குமார், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் குருதி ஆட்டம் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி ‘ரங்க ராட்டினம்’ என்கிற பாடல் வருகிற ஜூலை 1-ஆம் தேதி வெளியாக உள்ளது.

Categories

Tech |