வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்திலுள்ள பெட்டவாய்த்தலை பகுதியில் தர்மலிங்கம் என்ற முதியவர் வசித்து வருகிறார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் குடும்பத்தை நடத்துவதற்கு தம்பதிகள் பலரிடம் கடன் பெற்றுள்ளனர். ஆனால் வாங்கிய கடனை திரும்ப கொடுக்க முடியாததால் மன உளைச்சலில் இருந்த சரஸ்வதி பட்டவர்த்தி ரயில்வே கேட் அருகே சென்றுள்ளார்.
அதன்பிறகு சரஸ்வதி கரூரில் இருந்து சென்னைக்கு செல்லும் சரக்கு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.