வட சென்னை’ படத்தின் வெற்றிக்குப் பின் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள ‘அசுரன்’ படத்தின் ட்ரெய்லர் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
‘நமக்கு தேவையானத நம்ம தான் அடிச்சு வாங்கனும்’ என்ற வசனத்துடன் ‘அசுரன்’ படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் தற்போது வெளியாகியுள்ளது.வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நான்காவது முறையாக இணைந்து நடித்துள்ள படம் ‘அசுரன்’. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
வி கிரியேஷன்ஸ் சார்பில், கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இப்படம் வரும் அக்டோபர் மாதம் 4-ம் தேதி திரைக்கு வரஉள்ளது. பூமணியின் ‘வெக்கை’ நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் மஞ்சு வாரியர், பசுபதி, பாலாஜி சக்திவேல், அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.