Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வெளியில் செல்லும்போது…. இதை கொண்டுபோக மறந்து விடாதீங்க…. காவல்துறையினரின் தீவிர சோதனை….!!

போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்கள் மீது காவல்துறையினர் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில், சப்- இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவல்துறையினர் கிரீன் சர்க்கிள், அண்ணாசாலை, காமராஜர் சிலை சந்தித்து, மக்கான் சிக்னல் போன்ற பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிள், கார், ஆட்டோக்களில் வந்தவர்களை காவல்துறையினர் நிறுத்தி ஓட்டுநர் உரிமம், வாகன ஆவணங்கள் இருக்கிறதா என்றும் சீட் பெல்ட், ஹெல்மெட் அணிந்து உள்ளார்களா என்று சோதனை மேற்கொண்டனர்.

இதில் ஓட்டுநர் உரிமம் இல்லாத 20 பேருக்கு 500 ரூபாய் வீதம் 10 ஆயிரம் ரூபாய் காவல்துறையினர் அபராதம் விதித்தனர். மேலும் செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுதல், தடை விதிக்கப்பட்ட இடத்தில் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தியவர்கள், மோட்டார் சைக்கிளில் 3 பேர் பயணத்தில் போன்ற பல்வேறு போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்கள் 305 பேர் மீது போக்குவரத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலா 100 ரூபாய் வீதம் 30 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது என்று போக்குவரத்துத்துறை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |