Categories
உலக செய்திகள்

படகு சவாரிக்கு தனியாக சென்ற நபர்.. குடும்பத்தினரின் கண்முன்னே திடீர் மாயம்.. தேடுதல் பணி தீவிரம்..!!

ஐரோப்பாவில் உள்ள ஒரு பிரபல ஏரியில் காணாமல் போன நபரை சுவிட்சர்லாந்து உட்பட மூன்று நாடுகளை சேர்ந்த காவல்துறையினர் 23 படகுகளில் தேடி வருகிறார்கள்.

போலந்து நாட்டை சேர்ந்த 60 வயதுடைய நபர் தன் குடும்பத்தினருடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று, ஜெர்மனிக்கு வந்துள்ளார். அப்போது அவர் மட்டும் Constance என்ற ஏரியில்  படகு சவாரி செய்ய தனியாக சென்றிருக்கிறார். சிறிது நேரத்தில் அவரின் குடும்பத்தார் பார்வையிலிருந்து மாயமாகிவிட்டார்.

உடனடியாக, அந்த நபரின் மகன் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். எனவே சுவிட்சர்லாந்து காவல்துறையினர், ஆஸ்திரியா மற்றும் பவேரியன் என்று 23 படகுகளில் அவரை தேடி வருகிறார்கள். இதுமட்டுமல்லாமல் ஹெலிகாப்டர் உதவியுடனும் தேடப்பட்டு வருகிறது. அந்த நபர் சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனிக்கு இடையில் உள்ள பகுதியில் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நள்ளிரவில் சுமார் 1:30 மணிக்கு அவர் சென்ற படகு மட்டும் கண்டறியப்பட்டுள்ளது. அதன் பின்பு சுமார் மூன்று மணிக்கு தேடுதல் பணி நிறுத்தப்பட்டது.  நேற்று காலையில் ஹெலிகாப்டர் மூலம் தேடுதல் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது வரை அவர் கண்டுப்பிடிக்கப்படவில்லை என்ற தகவல் மட்டுமே தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Categories

Tech |