Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

விதவை பெண்ணுக்கு நடந்தது என்ன…? தப்பி ஓடிய வாலிபர்… கைது செய்த காவல்துறையினர்…!!

விதவை பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் சீமான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரஞ்சித் என்ற மகன் உள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். அதே பகுதியில் 42 வயது விதவை பெண் ஒருவர் வசித்து வருகிறார்.  இந்நிலையில் ரஞ்சித் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் அலறி சத்தம் போட்டுள்ளார்.

உடனே ரஞ்சித் பயந்து அந்த இடத்திலிருந்து தப்பி ஓடினார். இதுகுறித்து அந்த பெண் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற குற்றத்திற்காக ரஞ்சித்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |