தனியார் பேருந்துகள் இயங்காததால் அவற்றின் வணிகர்கள் டீசல் விலை அதிகரிப்பால் பல பிரச்சினைகள் ஏற்படுவதாக சங்கத்தின் உரிமையாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்றின் பரவல் காரணத்தால் தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் தொற்று குறைவாக இருக்கின்ற மாவட்டங்களில் பொது போக்குவரத்தை தமிழக அரசு செயல்பட அனுமதி அளித்துள்ளது. அதனால் தர்மபுரி மாவட்டத்தின் சுற்றுப்புறத்தில் அமைத்திருக்கும் பகுதிகளுக்கு பேருந்துகள் செயல்பட தற்போது தொடங்கியுள்ளது.
இதனையடுத்து இம்மாவட்டத்தில் இரண்டு பேருந்து நிலையங்களிலிருந்து அரசு பேருந்துகள் இயங்க ஆரம்பித்துள்ளது. ஆனால் பொதுமக்கள் அதிகம் வராததால் பேருந்து நிலையங்களில் அமைந்திருக்கும் கடைகள் திறக்கப்படாமல் இருந்தது. . இதனை தொடர்ந்து பேருந்தில் பயணம் செய்யும் பொது மக்கள் முககவசம் அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதில் தனியார் பேருந்துகளுக்கு தமிழக அரசு செயல்பட அனுமதிக்கவில்லை. பின்னர் 100% பயணிகளை ஏற்றி செல்ல அனுமதி அளித்தால் மட்டுமே தனியாருக்கு அனுமதி அளிக்க முடியும் என இச்சங்கத்தின் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். மேலும் தனியார் பேருந்துகளின் வணிகர்கள் டீசலின் விலை அதிகரித்து இருப்பதால் பல பிரச்சினைகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.