நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள் நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு ஒரு சில பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 2021-22ம் கல்வியாண்டு ஆன்லைன் வகுப்பில் மாணவர்கள் கலந்து கொள்வதற்காக கடந்த ஆண்டு கட்டண பாக்கியை செலுத்தும்படி பெற்றோரை வற்புறுத்தக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.