Categories
உலக செய்திகள்

இதை எதிர்பார்க்கவே இல்ல..! ரயில் நிலையத்தில் திடீர் பயங்கரம்… பிரபல நாட்டில் பரபரப்பு சம்பவம்..!!

லண்டனில் உள்ள ரயில்வே நிலையம் ஒன்றின் அருகே எதிர்பாராதவிதமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள நியுவிங்டன் எனும் பகுதியில் அமைந்துள்ள எலிபண்ட் அன்ட் காசல் ரயில் நிலையத்தின் அருகே திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் அருகிலிருந்த 6 கார்கள், 3 வணிக வளாகங்கள், தொலைபேசி பெட்டி ஆகியவை முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற 100 தீயணைப்பு வீரர்களும், 15 தீயணைப்பு வண்டிகளும் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

அதோடு மட்டுமில்லாமல் அப்பகுதி முழுவதும் கரும்புகை பரவி இருந்ததால் வீடுகளுக்குள் இருப்பவர்கள் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடி கொள்ளுமாறு அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டனர். இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் புகைப்பட காட்சிகள் அதிகமாக பகிரப்பட்டுள்ளது. இதற்கிடையே தீயணைப்பு வீரர்கள் அந்த தீயானது மாலை 4 மணிக்கு கட்டுக்குள் வந்ததாக தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Categories

Tech |