கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கொலம்பியாவில் அரசுப்படையினருக்கு , கிளர்ச்சியாளர் அமைப்பினருக்கும் இடையே பல ஆண்டுகளாகவே மோதல் ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து ராணுவத்திற்கும், கிளர்ச்சியாளர்களுக்குமிடையே அவ்வப்போது மோதல் நிலவி வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பலிடிஸ், சன் வென்செடி டி கல்மம், ஹலி ஆகிய நகரங்களில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் போலீசார் மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் 4 போலீசார் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு அமைப்பும் பொறுப்பை ஏற்காத நிலையில் கிளர்ச்சியாளர்களே தாக்குதலை நடத்தி உள்ளனர் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்நாட்டில் கடந்த சில தினங்களாகவே அங்கு உள்நாட்டு மோதல்கள் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.