ஹரிஷ் கல்யாண் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். இதையடுத்து சிந்து சமவெளி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் ஹரீஷ் கல்யாண் 2K கிஸ்ட்களின் சாக்லேட் பாயாக வலம் வருகிறார். பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்த இவரை பார்த்தால் பக்கத்து வீட்டு பையன் போலவே இருப்பதாக கூறுகின்றனர்.
இந்நிலையில் இன்று சாக்லேட் பாய் ஹரிஷ் தன்னுடைய 31வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனால அவருக்கு சமூக வலைதளங்களில் அவருடைய ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.