தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தொடர்ச்சியாக ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது. இதன் காரணமாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் முதன்முறையாக பல நாட்கள் கழித்து தினசரி கொரோனா பாதிப்பு 5000க்கும் கீழ் குறைந்ததாக குறிப்பிட்ட பாமக நிறுவனர் ராமதாஸ் தினசரி கொரோனா பரிசோதனை 1.60 லட்சத்திற்கும் குறையாமல் இருக்கிறதை சரியான நடவடிக்கை என்று கூறினார். இந்த நிலை நீடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். கொரோனா தீவிரம் அடைகிறதா? என்பதைக் கண்காணிக்க இது உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.