தனது விடாமுயற்சியினால் தோப்புக்கரணம் போட்டு ஆசிய அளவில் மாணவர் சாதனை படைத்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் லாயிட்ஸ் ரோட்டில் அஜயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜய் பிரசன்னன் என்ற மகன் இருக்கின்றார். தற்போது இவர் பன்னிரெண்டாம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் பிட்ஜெட் ஸ்பின்னர் கருவியை கண்டுபிடித்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் இவர் தோப்புக்கரணம் போடுவதை உலக சாதனையாக படைக்க வேண்டும் என்று தனது விடாமுயற்சியால் ஒரு நிமிடத்தில் 82 முறை தோப்புக்கரணம் போட்டு இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
தற்போது அதனை முறியடிக்கும் வகையில் 1 நிமிடத்தில் 88 முறை தோப்புக்கரணம் போட்டு உலக அளவில் சாதனை புத்தகத்தில் அஜய் பிரசன்னன் இடம் பிடித்துள்ளார். மேலும் இதற்கான சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சாதனை படைத்த மாணவனை அழைத்து கொடைக்கானல் தனியார் விடுதியில் பாராட்டு விழா நடத்தியுள்ளனர். இதில் அரசியல் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அதன்பிறகு அஜய் பிரசன்னன் கூறும்போது தினமும் தோப்புகரணம் போடுவதால் ஞாபக சக்தி மற்றும் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும் என்று கூறியுள்ளார். மேலும் இந்த பாரம்பரிய கலையை ஒலிம்பிக் போட்டியில் சேர்க்க வேண்டும் என்று அவர் அரசிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.