Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இதற்காகவா இப்படி பண்ணுன… பெண் எடுத்த விபரீத முடிவு… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

காதலன் திட்டியதால் மனமுடைந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வண்டிக்காரன் கொட்டாய் பகுதியில் ராஜகோபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயசூர்யா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் பட்டதாரியான இவர் அதே பகுதியில் அமைந்திருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இதில் அவரும் அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் வாலிபர் ஒருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சென்ற சில நாட்களுக்கு முன்பாக ஜெயசூர்யாவின் காதலன் அவரை திட்டியதாக கூறப்படுகிறது.

அதனால் மனமுடைந்த நிலையில் இருந்த ஜெயசூர்யா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து அவருடைய உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் ஜெயசூர்யாவின் உடலை எரிக்க முயற்சி செய்துள்ளனர். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று ஜெயசூர்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |