Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எப்பவுமே சண்டை தான் வருது… பெண் எடுத்த விபரீத முடிவு… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

குடும்ப பிரச்சினை காரணமாக தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சி செய்த பெண் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி பகுதியில் சின்னத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வீரம்மாள் என்ற மனைவி உள்ளார். அதே பகுதியில் சின்னத்துரையின் தம்பியான ரவிச்சந்திரன் வசித்து வருகிறார். இவருக்கு மீனா என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் சின்னதுரைக்கும் மீனாவிற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வழக்கம்போல் இருவருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதால் மீனா மன உளைச்சலுக்கு ஆளானார்.

அதனால் திடீரென வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து தனது உடல் மீது ஊற்றி  தீ வைத்து கொண்டார். இதனையடுத்து பலத்த தீக்காயம் அடைந்த மீனாவை அருகிலிருந்தவர்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு தற்போது மீனாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |