Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூங்க சென்ற… வாலிபருக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

தூங்கிக் கொண்டிருந்த வாலிபர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மூக்குப்பீறி பகுதியில் பேச்சி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சுடலை முத்துக்குமார் மற்றும் மூக்கன் என்ற இரு மகன்கள் இருந்துள்ளனர். இவர்களில் மூக்கன் என்பவர் எலக்ட்ரீசீயானாக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் மூக்கன் வீட்டில் சாப்பிட்டு விட்டு உறங்கச் சென்றுள்ளார். இதனையடுத்து காலையில் நீண்ட நேரமாகியும் மூக்கன் எழுந்திருக்காததால் அவரின் அண்ணனான சுடலை முத்துக்குமார் என்பவர் அவரை எழுப்புவதற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு அவர் மூக்கனை தட்டி எழுப்பியும் அவர் எழுந்திருக்கவில்லை. அப்போது மூக்கன் இறந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறி சத்தம் போட்டுள்ளார். அந்த அலறல் சத்தத்தைக் கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று பார்த்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மூக்கனின் அறையை சோதனை செய்துள்ளனர். அப்போது அங்கு அவரின் செல்போனுக்கு சார்ஜ் போடுவதற்கு சுவிட்சை மட்டும் போட்டுவிட்டு உறங்கியுள்ளார். இதனால் மூக்கன் தூங்கிக் கொண்டிருக்கும் போது அவரின் கை விரல்கள் எதிர்பாராதவிதமாக அந்த செல்போன் சார்ஜர் ஒயரின் மீது பட்டு அதன் மூலம் மின்சாரம் பாய்ந்து அவர் உயிரிழந்து விட்டார் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் மூக்கனின் உடலை கைப்பற்றிய உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |