Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

திருமணம் நடக்கணும்னா…. இதுயெல்லாம் வரதச்சனை தரனும்…. சப்-இன்ஸ்பெக்டரின் கொலை மிரட்டல்….!!

பள்ளி மாணவியை காதலித்து திருமணத்திற்கு மறுத்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள குரிசிலாப்பட்டு பகுதியில் அன்பழகன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகின்றார். இவரது மகன் மனோஜ்குமார் பெங்களூர் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக தனது தந்தையுடன் திருப்பத்தூர் காவலர் குடியிருப்பில் வசித்து வருகின்றார். இந்நிலையில் மனோஜ்குமாருக்கு மானவள்ளி பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு பயிலும் மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த மாணவியின் அக்காள் கணவரும் போலீஸ் ஏட்டாக பணிபுரிவதால் அவரும் திருப்பத்தூர் காவலர் குடியிருப்பில் வசித்து வருகின்றார். இதனால் மனோஜ்குமாருக்கு, மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு 1 வருடமாக காதலித்து வந்துள்ளனர்.

இதனையடுத்து மாணவியே மனோஜ்குமாருக்கு திருமணம் நடத்தி வைப்பதற்கு அவருடைய அக்காள் சப் இன்ஸ்பெக்டர் அன்பழகனிடம் கூறியதற்கு 30 பவுன் நகை மற்றும் கார் வரதட்சணையாக கொடுத்தால் மட்டுமே திருமணம் செய்து வைப்பதாக கூறி மறுப்பு தெரிவித்துள்ளார். அதன்பின் மாணவியின் அக்காவிடம் எந்த போலீஸ் நிலையத்தில் வேண்டுமானாலும் புகார் கொடு என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனைதொடர்ந்து மாணவியின் தந்தை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின்பேரில் காவல்துறையினர் மனோஜ்குமாரை போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அதன்பின் கொலை மிரட்டல் கொடுத்த சப்- இன்ஸ்பெக்டர் அன்பழகனை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |