தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகளும் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் வருகின்ற 6 ஆம் தேதிமுதல்வர் ஸ்டாலின் பள்ளிகள் திறப்பு தொடர்பாக தனியார் பள்ளிகளை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பீகார் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிப்பு வெளியான நிலையில் இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.