காதல் விவகாரத்தில் பெண்ணின் சகோதரர் காய்கறி வியாபாரியை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ் புரம் பகுதியில் சுபாஷ் என்ற காய்கறி வியாபாரி வசித்து வருகிறார். இந்நிலையில் சுபாஷும், பூ மார்க்கெட் பகுதியில் வசிக்கும் ஒரு இளம் பெண்ணும் ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர். இதனை அடுத்து இளம்பெண்ணின் சகோதரர்களுக்கு இவர்களது காதல் விவகாரம் தெரிந்த உடனே அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனாலும் இரண்டு பேரும் காதலை தொடர்ந்ததால் இளம்பெண்ணின் சகோதரர் கோபமடைந்தார்.
அதன்பின் அந்த இளம் பெண்ணின் சகோதரர் சுபாஷை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று தனது நண்பர்களுடன் இணைந்து அவரை தாக்கியுள்ளார். இதுகுறித்து சுபாஷ் ஆர்.எஸ் புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.