மன உளைச்சலில் இருந்த வாலிபர் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அன்னமங்கலம் கிராமத்தில் லாரன்ஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு லாரன்ஸின் தாய் அவரைத் திட்டியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த லாரன்ஸ் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் பூச்சி மருந்தை எடுத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீது அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி லாரன்ஸ் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.