தமிழகத்தின் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் தமிழகத்தில் கொரோனா பொது நிவாரண நிதியை முதல்வர் ஸ்டாலின் திரட்டி வருகிறார். அவருக்கு பலரும் நிதி வழங்கி வருகிறார்கள்.
இந்நிலையில் கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு உதவும் வகையில் துவங்கப்பட்ட முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பலரும் உதவி வருகின்றன. இதையடுத்து நடிகர் பிரசாந்த் மற்றும் அவரது தந்தை நடிகர் தியாகராஜன் ஆகியோர் முதல்வர் ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து 10 லட்சம் ரூபாய் கொரோனா நிவாரண நிதியாக வழங்கினர்.