அமமுக_வின் செய்தி தொடர்பாளர் புகழேந்தி பேசிய ஆடியோ வெளியானதை தொடர்ந்து அவர் கட்சியை விட்டு விலகுவார் என்று தெரிகின்றது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக_வின் ஏற்பட்ட குழப்பத்தை அடுத்து TTV தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை தொடங்கினார்.நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அமமுக போட்டியிட்டு தோல்வியடைந்ததை தொடர்ந்து பல நிர்வாகிகள் விலகி வருகின்றனர்.அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து விலகிய அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ் செல்வன் திமுகவில் இணைந்துள்ளார்.
அப்போது TTV கட்சியை விட்டு விலககாரணம் அப்போது வெளியான ஆடியோ தான். அதில் TTV மோசனமான அரசியல் செய்வதாக விமர்சித்த TTV கடுமையான வார்த்தைகளால் தாக்கி பேசினார். அதை தொடர்ந்தே அவர் திமுகவில் இணைந்தார்.அதே போல தற்போது அமமுக_வின் மற்றொரு முக்கிய புள்ளி பேசிய ஆடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமமுக_வின் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி கடந்த 6-ம் தேதி கோவை சென்ற போது அங்குள்ள ஓட்டலில் அமமுக நிர்வாகிகளுடன் பேசும் வீடியோ தற்போது வெளியாகிள்ளது. அதில் புகழேந்தி பேசும் போது , நாம் போற இடத்திலேயேயும் , இருக்கின்ற இடத்திலேயேயும் முகாந்திரம் இல்லை என்றால் தொடர்ந்து இருக்கக் கூடாது. நமக்கான ப்யூச்சரை சரி பண்ணிட்டுத்தான் மாற்று இடத்துக்கு போகணும். அந்த ஐடியாவோடுதான் நான் இருக்கேன்.
யார் கிட்டேயும் போய் நிற்க எனக்கு இஷ்டமில்லை.அட்ரஸ் இல்லாமல் 14 வருஷம் வெளியில் இருந்த டி.டி.வி.தினகரனை ஊருக்குக் காண்பித்ததே நான்தான். ஜெயலலிதா சாவில் கூட அவர் கிடையாது என்று புகழேந்தி பேசிய ஆடியோ தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஆடியோ வெளியானதை தொடர்ந்து தங்க தமிழ்செல்வன் அமமுக_வில் இருந்து விலகினார். எனவே தற்போது புகழேந்தியும் விலகுவார் என்று அவரின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.